கோவில் யானை கருணைக்கொலை! உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியது!!

சென்னை: கோயில் யானையை கருணைக்கொலை செய்யமுடியுமா என்று உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி.
கடந்த ஒருமாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை வனவிலங்கு சிறப்பு சிகிச்சையியல் துறை நிபுணர் உட்படக் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீவிரசிகிச்சை அளித்தும் யானையின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “சேலம் சுகவனேஸ்வர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரிக்கு படுக்கைப்புண் ஏற்பட்டுள்ளது.யானையை மருத்துவரீதியாக குணப்படுத்த முடியாது.  ஜேசிபி எந்திரம் மூலம் நிற்கவைக்க முயற்சி செய்வதால் யானைக்குக் காயம் ஏற்படுகிறது. எனவே யானையைக் கருணைக் கொலை செய்ய உத்தரவிடவேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் ஆகியோர் இதுகுறித்து ஏப்.16க்குள் பதில் அளிக்கவேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here