ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதே போல் உத்தரப்பிரதேசம் மாநிலம் உனா நகரிலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார்.இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் குலாம்நபி ஆசாத், பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்ளிட்ட ஏரளமானோர் பங்கேற்றனர்.
இது குறித்து காங்கிரஸார் கூறும் போது தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பவே நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏற்றி போராடுவதாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here