சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

டெல்லி: டெல்லியில் 65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மாம்’ இந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.‘மாம்’ திரைப்படம் ஸ்ரீதேவியின் 300வது படமாகும். இப்படத்தில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை பழிவாங்கும் தாயின் கதாபாத்திர்த்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார்.அந்த கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார், ரவி உதயவார்
படத்தை இயக்கியிருந்தார். நவாசுதின் சித்திக், அக்‌ஷய் கண்ணா, சாஜல் அலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.துபாய் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது ஸ்ரீதேவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here