பாஜகவுக்கு எதிராக களத்தில் குதித்த பிரகாஷ்ராஜ்!

விஜயபுரா: கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில்ஆளும் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:-இந்தியாவில் அனைத்து வகுப்பினரும் சுதந்திரமாக வாழும் உரிமையை நமது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.
மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கட்சியாக பாஜக மாறிவிட்டது. எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பது கிடையாது. நாட்டில் ஏதாவது ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிரித்தாளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
காவிரி பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் உண்மையிலேயே யாருக்கும் இல்லை.பிரச்சினையை அரசியலாக்க முயன்று வருகின்றனர். காவிரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும்.
ஆனால் அதை செய்யாமல் பிரச்சினைகளை உருவாக்கி அரசியலில் குளிர்காய்ந்து வருகிறார்கள்.கர்நாடகாவில் பாஜக ஆட்சி வரக்கூடாது. மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here