ஐபோன் பெட்டியில் போதைப்பொருள் கடத்தல்! துபாயில் ஒருவருக்கு மரணதண்டனை!!

துபாய்: ஐபோன் பெட்டியில் போதைப்பொருள் கடத்திவந்த வாலிபருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
அபுதாபியில் இருந்து துபாய்க்கு ஒருவர் விமானத்தில் வந்தார்.
விமான நிலையத்தில் அவர் கொண்டுவந்த பை சோதனையிடப்பட்டது. அதில் இரண்டு ஐபோன் பெட்டிகள் இருந்தன.ஆனால், சந்தேகத்திற்கிடமாக அவை கனமாக இருந்தன. விமான பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்தனர்.
நண்பர் ஒருவர் ஐபோன் வாங்கிவருமாறு கூறினார். அதனால் வாங்கிவந்தேன் என்று அந்நபர் கூறினார்.

இரு நகரங்களிலும் ஐபோன் விலை ஒன்றுதான்.
எனவே மேலும் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஐபோன் பெட்டியை பிரித்தனர்.
அதில் போதைப்பொருள் இருந்ததால் அந்நபரை கைது செய்தனர்.

அவரது நபரை விசாரித்ததில் ஐபோன் எதுவும் தான் வாங்கிவரச்சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
இதனால் கைதான நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
போதைப்பொருள் கடத்திவந்த குற்றத்துக்காக அவருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here