காமன்வெல்த் போட்டி! சர்ச்சையில் சிக்கிய இந்தியவீரர்கள்!!

ஆஸ்திரேலியா: காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க சென்ற இந்திய தடகளவீரர்கள் சர்ச்சையில் சிக்கினர்.
அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அதிவேக நடை வீரர் கே.டி.இர்பான் மற்றும் நீளம்தாண்டுதல் வி. ராகேஷ் பாபு ஆகிய இருவர் தங்கியிருந்த அறை மற்றும் ராகேஷின் கைப்பையில் ஊசிகள் கிடைத்தன. இருவரும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள காமன்வெல்த் விதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்.

அவர்களை காமன்வெல்த் தொடரில் இருந்து நீக்கம் செய்கிறோம் என்று காமன்வெல்த் தலைவர் லூயிஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
இந்திய தடகள ஆணையம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்திய வீரர்கள் மீது தவறான குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

நமது வீரர்களுக்கு தடைவிதித்ததை அனுமதிக்க முடியாது.
இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் மேல்முறையீடு செய்வோம் என்றார்.  ட்ரிபிள் ஜம்ப் விளையாட்டின் இறுதிப்போட்டிக்கு  ராகேஷ்பாபு தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here