சிகரெட் விலை தொடர்ந்து உயர்வு!! நோயில் இருந்து விடுபடும் மக்கள்!!

கனடா:சிகரெட்டுக்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் பல லட்சம் மக்கள் நோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
கனடா நாட்டில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் நடத்திய ஆய்வில் இவ்விபரம் தெரியவந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 13நாடுகளில்490மில்லியன் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.உலகம் முழுவதும் பல நாடுகளில் சிகரெட் விலை ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது.
ஐரோப்பாவில் ஒரு பாக்கெட் சிகரெட்விலை 8பவுண்ட் என்று விற்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.இதனால் சிகரெட்டை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தினம் ஒரு பாக்கெட் என்று புகைபிடித்தவர் தற்போது 3சிகரெட் என்று குறைவாக புகைக்கிறார்.
இதனால் மனிதவாழ்வில் 449மில்லியன் ஆண்டு ஆயுள் அதிகரித்துள்ளது. அதேபோன்று 157பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது.வளர்ந்த நாடுகளை விடவும் குறைவான வருவாய் உடைய ஏழைநாட்டு மக்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகம் உள்ளது.
இதனால் அந்நாடுகளின் வளர்ச்சியை பாதிக்கும் முக்கிய காரணியாக சிகரெட் உள்ளது.
சிகரெட் பாக்கெட் விலை 20பவுண்ட் என்று அதிகரித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் புகைப்பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருவது கவலைக்குரியது.
இது சமூகசமன்பாடுகளை உடைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here