பாஜக-அதிமுக இடையே விரிசல் தொடக்கம்! நமது அம்மா நாளிதழில் நெருப்புக்கவிதை!

சென்னை:பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே விரிசல் தொடங்கியுள்ளது. இவ்விபரம் முதல்வரின் ஆதரவில் நடந்துவரும் நமது அம்மா நாளிதழில் எதிரொலித்துள்ளது.ராணுவ கண்காட்சிக்கு வந்து திரும்பினார் பிரதமர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வரும், துணைமுதல்வரும் அவரை வரவேற்றும், வழியனுப்பியும் வைத்தனர்.
வழியனுப்பும் நிகழ்ச்சியில் காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தார் முதல்வர்.அதற்கு பிரதமர் பதிலேதும் சொல்லவில்லை.

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான ‘நமது அம்மா’ இதழில், ’நெருப்பாகும் வெறுப்பு’ என்ற தலைப்பில்
மத்திய அரசின் மீது நெருப்புக்கவிதை ஒன்று வெளியாகி உள்ளது.
பிரதமருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை பாராட்டியுள்ளது இக்கவிதை.நீட் முதல் காவிரி மேலாண்மை வாரியம் வரை தமிழகத்துக்கு மத்திய இழைத்துவரும் அநீதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழக பாஜக தலைவர்களையும் கண்டிக்கிறது அக்கவிதை.
இறுதியில், மத்திய அரசு மனப்போக்கை மாற்றுவதே சிறப்பு, இல்லையேல் ஒற்றுமை ஒருமைப்பாட்டில் உருவாக்கிவிடுமே வெடிப்பு என எரிமலையாக சீறியுள்ளது.18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கவழக்கு தீர்ப்புவந்தால் சில உதவிகளை எடப்பாடி பழனிசாமி மத்தியில் இருந்து எதிர்பார்க்கிறார். அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்பதால் கவிதையில் கருப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது என்று அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here