தவறான கருத்தடை சாதனம்! மரண வாசலை தொட்டுத்திரும்பிய பெண்!!

ஆஸ்திரேலியா: கருத்தடை சாதனம் தவறாக பொருத்தப்பட்டதால் இறப்பின் வாசலை தொட்டுவிட்டு திரும்பினேன் என்று தெரிவித்துள்ளார் ஒரு பெண்.இந்தியாவில் பெண்களுக்கான கருத்தடை சாதனம் காப்பர் டி.
இதேபோன்று ஆஸ்திரேலியாவில் பிரபல கருத்தடை சாதனம் மிரனா.
இதனையும் கருப்பை வாசலில் பொருத்துவார்கள். இதனால் ஆண்களின் உயிரணுக்கள் உறிஞ்சப்பட்டு கரு உருவாவது தடுக்கப்படும்.ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷனான் ஹப்பார்ட்(25) என்ற பெண்ணுக்கு 3வது குழந்தை பிறந்தது. அவர் கருத்தடை சாதனம் பொருத்திக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்களிடம் தெரிவித்தார்.
அவருக்கு மிரனா பொருத்தப்பட்டது. ஆனால், அன்றிரவே கடுமையான ரத்தப்போக்கினால் அவர் பாதிக்கப்பட்டார்.
3குழந்தைகள் போதாது மேலும் பல குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் மிரனாவை பொருத்திக்கொண்டேன்.
ஆனால் அன்றைய தினம் காலையில் கண்விழித்த போது அடிவயிற்றில் கடுமையான வலி.
எனது படுக்கை முழுவதும் ரத்தமாக இருந்தது. நான் அதனைப்பார்த்த அதிர்ச்சியில் மயக்கமானேன்.
டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து என்னை காப்பாற்றினார்கள்.பாலூட்டும் தாய்மார்களுக்கு மிரனா சரியான தீர்வல்ல என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள். என்று தனது கருத்தடை அனுபவத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஷனான் ஹப்பார்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here