ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1!

சென்னை: கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., – 1ஐ என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ விண்ணில் இன்று காலை வெற்றிகரமாக ஏவியது.வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அதிகாலை 4.04 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.சி-41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.இந்த செயற்கைக்கோளின் மூலம் சாலை கப்பல் மற்றும் விமான போக்குவரத்து ஆகியவற்றை துல்லியமாககணிக்க முடியும்.இந்த செயற்கைக்கோளின் சிக்னல் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும்.வானிலை குறித்த எச்சரிக்கைகள் மற்றும் மீன்பிடிக்க தகுந்த இடங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்து கொள்ள முடியும்.இந்த செயற்கை கோளின் எடை 1425 கிலோ. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here