பாட்மிண்டன் சர்வதேச தரவரிசை! இந்தியவீரர் ஸ்ரீகாந்த் முதலிடம்!!

டெல்லி: சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்கிடாம்பி.பாட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த்(25). 2017ல் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ் என, நான்கு சூப்பர் சீரிஸ் கோப்பை வென்றார். இதனால் 76,895புள்ளிகளுடன் உலகத் தரவரிசையில் 2ம் இடம்வகித்தார்.இந்நிலையில், புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. முதலிடத்தில் இருந்த டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் (75,470), இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, இந்தியாவின் ஸ்ரீகாந்த் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாட்மின்டன் தரவரிசையில், இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.புள்ளிகள் கணிணி மயமாக்கப்படும் முன், கடந்த 1980ல் இந்தியாவின் பிரகாஷ் படுகோனே, முதலிடம் பிடித்து இருந்தார். கடந்த 2015, மார்ச் 1ல், சர்வதேச தரவரிசையில் இடம் பிடித்த, முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றிருந்தார் செய்னா நேவல்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில். உலக தரவரிசையில் முதல்இடத்தை பிடித்தது பெரும் மகிழ்ச்சி.
தற்போதைய காமன்வெல்த், அடுத்து ஆசிய விளையாட்டு என, பெரிய தொடர்களில் சாதிக்க வேண்டும்.
அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) எனது தேசத்தை பெருமை அடையச் செய்வதுதான் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here