காவிரி வாரியம்! பிரதமருக்கு கமல் கோரிக்கை விடியோ, கடிதம்!!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதித்து வருகிறது.
இதனால், தமிழகத்துக்கு இன்று வியாழக்கிழமை வருகைதந்த பிரதமரை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம் நடந்தது.மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் காவிரி வாரியம் உடனே அமைக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்து செல்பி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கருப்புச்சட்டையுடன் அவர் தோன்றியுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், பிரதமருக்கு மனம்திறந்த கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.
காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க தவறியதால் தமிழர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை சொல், செயலில் முழுமையாக நிறைவேற்றவேண்டியது உங்கள் கடமை.
குஜராத் முதல்வராக இருந்தபோது நர்மதை நதி நீரை வாரியம் அமைத்து 4மாநிலங்கள் பகிரவைத்த அனுபவம் உங்களுக்கு உண்டு.காவிரி வாரியம் தொடர்பாக உங்கள் செயல்பாட்டை உடனே எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கமல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here