எட்டு வயது சிறுமி பலாத்காரம்! காஷ்மீரில் கொடூர சம்பவம்!!

ஜம்மு: காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள்.
ஒரு வாரத்திற்குப்பிறகு வனப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இவ்விபரம் தெரியவந்து குற்றவாளிகளை அடையாளம் கண்ட ஒரு காவலரும் அச்சிறுமியிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இவ்வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here