காமன்வெல்த் போட்டிகள்! சுஷில்குமார் ஹாட்ரிக் சாதனை!!

கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து 3முறை தங்கப்பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் சுஷில்குமார்.
மல்யுத்த போட்டியில் 74 கி.கி., பிரிவில் பங்கேற்றார்.தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ் போதாவுடன் மோதினார்.
6நிமிட போட்டியில் முதல் ஒன்றரை நிமிடங்களிலேயே தனது வெற்றியை உறுதிசெய்தார்.
இவர் டில்லி(2010), கிளாஸ்கோ(2014) நகரங்களில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.இதேபோல் ஆண்களுக்கான 57கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் இவர் கலந்துகொண்டது இதுவே முதல்முறை.
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு 2தங்கம் கிடைத்தது.
இந்தியாவின் சீமா பூனியா 60.41 மீ., துாரம் எறிந்து வெள்ளியும்., சக வீராங்கனை நவ்ஜித் (57.43 மீ.,) வெண்கலமும் வென்றனர்.

பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் பபிதா குமாரி போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு போட்டியில் கிரண் வெண்கலம் வென்றார்.பெண்களுக்கான ரைபில் ப்ரோன் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் வெள்ளிப்பதக்கம் தட்டி வந்தார்.
இந்தியா 31 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here