மகாபாரத கர்ணன் வேடத்தில் சீயான் விக்ரம்!

சென்னை: மகாவீர் கர்ணா திரைப்படம் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படவுள்ளது. என்னு நிண்டே மொய்தீன் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இப்படத்தை இயக்குகிறார். இதில் சீயான் விக்ரம் கர்ணன்வேடத்தில் நடிக்கிறார்.மகாபாரதத்தின் கதையை மையமாக கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த படம்தயாரிக்கப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில்தொடங்கவுள்ளது.
இதில் விக்ரம் போர்வீரனாக நடிக்க இருக்கிறார். சண்டைகாட்சிக்காக வெளிநாட்டு சண்டை கலைஞர்களிடம் பிரத்யேக பயிற்சி பெற்றுவருகிறார்.
முதலில் மலையாளத்தில் மட்டுமே தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. இயக்குனர் விமல் சபரிமலை சென்று படத்தின் திரைக்கதையை சந்நிதியில் வைத்து வணங்கி வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here