சீருடை காவலர்களை தாக்குவது வன்முறையின் உச்சகட்டம்! ரஜினிகாந்த் டுவிட்டரில் கருத்து!!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றுசென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன.அதில் இயக்குனர் பாரதிராஜா கவிஞர் வைரமுத்து உட்பட 700 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் காவலர்களை தாக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.அந்த பதிவில்வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை
தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here