மத்திய அரசை எதிர்க்க தயாராகும் தமிழக அரசு!

சென்னை:மத்திய அரசின் திட்டங்களால் நாளுக்குநாள் நெருக்கடியை சந்தித்துவரும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கியுள்ளது.காவிரிவாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டிவருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளது.
இருந்தபோதும், நீதிமன்றத்தில் காரசாரமாக வாதங்களை வைக்கவில்லை.நியூட்ரினோ, ஸ்டெர்லைட், விவசாயிகள் பிரச்சனை, கிரிக்கெட் போன்றவற்றில் மத்திய அரசின் உதவிகளை கோரினாலும் அது மாநில பிரச்சனை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்துவிட்டனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பு போராட்டங்களை முழுஆசியோடு ஆதரித்துவருகிறது தமிழக அரசு.
15வது நிதிக்கமிஷன் பரிந்துரைகள் தொடர்பாக தென்னிந்திய நிதியமைச்சர்கள் மாநாட்டை பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
இருந்தபோதும், நிதியமைச்சர் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விபரங்கள் பெறப்பட்டுள்ளன.
உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தமிழகம் தனது வரிப்பங்கை உரிமையுடன் வசூலிக்க தயாராகிவருகிறது.
இதற்காக மோடியுடன் மோத எடப்பாடி தயாராகி வருகிறார்.நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மீத்தேன் போன்ற மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் தமிழகத்துக்குத் தேவையில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
நிதி ஒதுக்கீட்டில் உரிய பங்கை பெறுவோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here