நடிகருடன் ஸ்ரீரெட்டி! புகைப்படங்கள் ’லீக்’!!

ஹைதராபாத்: தெலுங்கு சினிமா உலகத்தில் நடிகைகளுக்கு நடந்துவரும் கொடுமைகளை கசியவிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
சினிமா வாய்ப்புகள், சம்பள உயர்வுக்காக நடிகைகளிடம் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நடத்தும் அத்துமீறல்களை வாட்ஸ் ஆப் உரையாடல்களாக இவர் வெளியிட்டு வருகிறார்.


இதுகுறித்து மவுனசாட்சியாக இருக்கும் தெலுங்கு திரைப்படவர்த்தக சபை முன் அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார்.
முதலில் இயக்குநர் சேகர் கம்முலா தொடர்பாக பரபரப்பு பதிவிட்டிருந்த ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் அபிராமுடன் நெருக்கமான படங்களை வெளியிட்டார்.
டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இப்படங்களை காண்பித்தார்.


பிரபல தெலுங்கு நடிகர் சுரேஷ்பாபுவின் மகனும், பாகுபலி நடிகர் ராணாடகுபதியின் சகோதரர் அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை ஸ்ரீரெட்டி வெளியிட்டார்.
“சுரேஷ் பாபுவின் மகன் அபிராம் என்னை ஏமாற்றிவிட்டார்.
திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்ட ஸ்டுடியோவில் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.

தலித் மற்றும் மகளிர் அமைப்புகள் முன்வந்து எனக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற ஆண்களால் பலரது வாழ்க்கை அழிக்கப்படுகிறது” என்றும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here