செல்பிக்காக ஒரு மியூசியம்!

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செல்பி புகைப்படத்துக்காக அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
செல்போன்களில் உள்ள கேமராக்களில் செல்பி படங்கள் எடுப்பது உலகம் முழுவதும் புதிய பழக்கமாகி வருகிறது.இளைஞர்கள் இப்படங்களை எடுப்பதில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
செல்பி படங்கள் இளையோரின் நம்பிக்கை, அழகு, திறமையை பிரதிபலிப்பதாக உள்ளன.

உலகில் சிறந்த செல்பி படங்கள், ஓவியங்கள், கருவிகள் ஆகியவற்றைக்கொண்ட மியூசியம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
மே மாதம் வரை இந்த மியூசியம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.இதில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற செல்பி படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பார்வையாளர்கள் சுயபுகைப்படங்கள் எடுப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மனிதனின் கலைவடிவம் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதில் செல்பி என்னும் கலைவடிவம் இந்த நூற்றாண்டுக்கானது என்று கலைவிமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here