சிறுத்தைப்புலியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த வனத்துறை ஊழியர்!

கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் சிறுத்தைப்புலி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டனர். தகவலறிந்து வனச்சரகர் திவாரி சம்பவ இடத்துக்கு உடனே வந்தார்.சிறுத்தையை மருத்துவனைக்கு கொண்டு செல்ல கூண்டு அனுப்புமாறு வனத்துறை
அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். கூண்டு வர தாமதம் ஆனதுடன் சிறுத்தையின்
உடல்நிலையும் மோசமாகிக்கொண்டிருந்தது.இந்நிலையில் வனத்துறை ஊழியா் ஒருவர் தைரியத்துடன் சிறுத்தைப்புலியை 2 கி.மீ தூரத்திலுள்ள வனத்துறை அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் சிறுத்தை உயிர் பிழைத்துள்ளது.
வனத்துறை அலுவலகம் கொண்டு செல்லும் வழியில் சிறுத்தை மயக்கத்திலிருந்த மீண்டிருந்தால் ஊழியரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தன்னை பற்றி கவலைபடமால் சிறுத்தையை காப்பாற்றிய ஊழியருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here