காதலரை ஹீரோவாக்கி ஜோடியாக நடிக்கும் லேடிசூப்பர்ஸ்டார்!

சென்னை: கோலிவுட்டில் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதல் ஜோடிகளாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து வருகின்றனர்.நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன்
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது அதை ஏற்கவில்லை.லேடி சூப்பர் ஸ்டாராகி விட்ட நயன்தாரா இனி பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தால் பாட்டு பாடுவதுடன் வேலை முடிந்துவிடும் என்பதால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க கூடாது என ஒரு முடிவை எடுத்தார்.கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்யத் துவங்கினார்.இந்நிலையில் இயக்குனராக இருக்கும் தனது காதலர் விக்னேஷ் சிவனை
ஹீரோவாக்கும் முயற்சியில் நயன்தாரா ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜோடியாக அவரே நடிக்கவும் திட்டமிட்டிருப்பதுடன் தமிழ், தெலுங்கில் சொந்தமாக தயாரிக்கவும் எண்ணி உள்ளாராம்.இப்படத்தின் விக்னேஷ் சிவன் இயக்குவதா அல்லது வேறு இயக்குனரிடம் ஒப்படைப்பதா என இருவரும் ஆலோசித்து வருகின்றனர். நிஜவாழ்வில் காதல் ஜோடியாக வலம் வரும் இருவரும்திரையிலும் நிஜ காதலர்களாகவே நடிக்க உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here