ரஜினி கருத்துக்கு பெருகும் கண்டனம்!

சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்டனர். அதனை ரஜினிகாந்த் கண்டித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது.
வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. என்று அவர் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தலைவர் தமிழிசை வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

அதேநேரம் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து பல தலைவர்கள் பேசிவருகின்றனர்.
ரஜினியின் கடந்தகாலங்களை நினைவுபடுத்தி மீம்ஸ்களும் இணையத்தில் குவிந்துவருகின்றன.இயக்குநர் பாரதிராஜா:இந்தப் பெட்டிக்குள் பூ இருக்கிறது என நினைத்தோம். ஆனால் இருப்பது பூ நாகம் என இப்போதுதான் தெரிகிறது. மைதானம் நோக்கி நாங்கள் கட்சிப் பாகுபாடு இன்றி போராட்டம் நடத்தினோம். ஓர் அறிக்கைகூட அவர் விடவில்லையே. அவருக்கு டப்பிங் செய்கிறார்கள். இன்னும் தன்னை முழு அரசியல்வாதி எனச் சொல்லவில்லை. சொல்லி நடக்கட்டும். பிறகு ஊனம் எங்குள்ளது எனச் சொல்கிறேன்.இயக்குனர் அமீர்: ரஜினியின் இந்த கருத்து அரசியல் புரியாமையை காட்டுகிறது என தெரிவித்தார்.
யார் முதலில் கம்பை சுழற்றியது என்பதை தெரியாமல் அவர் பார்த்த காட்சியை வைத்து உடனே பதிவிட்டுவிட்டார். இது வருத்தத்திற்கு உரியது.எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி: போராட்டக்காரர்கள் செய்தது தவறு என்றும் போலீசார் செய்தது சரி என்றும் ரஜினி கூறியிருப்பதன் மூலம் மேலும், அவர் கர்நாடகத்தை ஆதரிப்பதாக உள்ளது.
கர்ப்பிணி உஷாவை காவலர் தாக்கியப்போது இவர் எங்கே போனார்?
சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்: காவிரி விவகாரம் குறித்து கருத்து சொல்ல ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here