கைகளை பின்னால் கட்டி நீச்சலில் சாதனை படைத்த உடன்பிறப்புகள்!

எர்ணாகுளம்: கேரளா மாநிலத்தில் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு பெரியார் ஆற்றில் நீச்சல் அடித்து உடன்பிறப்புகள் சாதனை படைத்துள்ளனர்.நீச்சல் கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும், யார் வேண்டுமானாலும் நீச்சல் பயிற்சியை கற்றுக்கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நீச்சல் அடித்து இலக்கை அடைந்தனர்.கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலுவா மனப்புரம் பகுதியைச் சேர்ந்த சைபா அவரது சகோதரர் கிஷாம் இருவரும் சாஜி வலச்சேரி நீச்சல் பயிற்சியாளரிடம் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். நீச்சல் பயிற்சியின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சியில் ஈடுபட்டனர்.இருவரும் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு பெரியார் ஆற்றின் ஆஷ்ரமன்கடவு பகுதியிலிருந்து ஆலுவா மனப்புரத்திற்கு நீச்சல் அடித்து 25 நிமிடங்களில் இலக்கை அடைந்தனர். இருவரின் சாதனையை பலரும் பாராட்டிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here