துபாயில் நிதிநிறுவனம் நடத்தி மோசடி! இந்தியருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

துபாய்: கோவாவை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ். லிமோஸ், ரியான் டி சோஸாவுடன் இணைந்து கோவாவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். தங்கள் நிதி நிறுவனத்தில் 25000 டாலர் முதலீடு செய்தால் 120 சதவீதம் லாபம் தருவதாக கூறியுள்ளனர்.
இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி அந்த நிறுவனத்தில் பலர் முதலீடு செய்துள்ளனர்.தொடக்கத்தில் குறிப்பிட்டபடி லாப தொகையை திருப்பி தந்துள்ளனர். அதன் பின்னர் முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை தரவில்லை. இதையடுத்து முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை அந்த நிறுவனம் திருப்பி தரவில்லை.இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். புகாரையடுத்து துபாய் பொருளாதார துறை 2016 ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டு லிமோஸ், ரியான் டி டிசோஸா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் நேற்று துபாய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் நிதி நிறுவன உரிமையாளரான லிமோஸ் மற்றும் ரியோசிற்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்நிறுவத்தில் ஐக்கிய அரபுநாடுகளை சேர்ந்த 7000க்கும் அதிகமானோர் முதலீடு செய்து ஏமாந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here