போலி வேட்பாளர் பட்டியல்! சித்தராமையா குற்றச்சாட்டு!!

பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பா.ஜ.க. சார்பில் அமித்ஷாவும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய போலி பட்டியலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை இன்னும் இறுதி செய்யவில்லை.ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் போலி பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. எற்கனவே
வெளியிடுள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here