சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து!

சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை இடம்பெறும் மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.
போலீசார் பாதுகாப்பு அளிக்க மறுப்பதால் போட்டி இடமாற்றம் செய்யப்படுவதாக ஐபிஎல் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
 காவிரி வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் பகுதியில்  போராட்டம் நடத்தியவர்கள்  கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை நடத்த  4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி வினோத் ராய் பேசுகையில், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம். விசாகப்பட்டணம், திருவனந்தபுரம், புனே மற்றும் ராஜ்கோர்ட் நகரங்கள் இதற்காக தயாராக இருக்கிறது என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here