காவிரி போராட்டம்! ரயிலில் ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது!!

திண்டிவனம்:காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பாமக பிரமுகர் ரயில்மீது ஏறினார். மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.காலையிலிருந்து பாமக இளைஞர்கள் நகரப் பகுதிகளில் சென்று, திறந்துள்ள கடைகளை மூடச்சொல்லி எச்சரிக்கை செய்தார்கள்.
சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் திண்டிவனத்தில் நின்றபோது பாமக இளைஞர்கள் ரயிலை மறித்தார்கள். அதன் கூரையில் சிலர் ஏறினர்.

திண்டிவனம் நகர பாமக இளைஞர் அணித் துணைச் செயலாளர் ரஞ்சித் இன்ஜினில் ஏறியபோது மின் கம்பியில் சிக்கித் தீயாக ரயில் மீதே விழுந்தார்.
அவரை மீட்டு புதுச்சேரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.70% தீக்காயங்களுடன் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்திவருகிறார்.  அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here