நாவல் பழம்! அற்புதமான மருத்துவக்கனி!

சென்னை: பல்வேறு சத்துக்களை கருப்புத்தோல் போர்த்தி காப்பாற்றி வைத்திருக்கும் நாவல் பழம் ஒரு அற்புதமான மருத்துவக்கனி ஆகும்.நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம்
கொண்டவை.கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி
போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் நாவல்பழத்தின் விதைகளை நிழலில் உலர்த்தி ஒரு கிராம் அளவு காலை மாலை என சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும். மனித உடலின் தோலில் சுருக்கம் விழுவதைத் தடுத்து வயதாவதைத் தள்ளிப்போடுகிறது.நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அதோடு அஜீரணக் கோளாறுகளைப் போக்கி குடல் தசைகளை வலிமையாக்குகிறது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். மருத்துவ குணம் உள்ள பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம் ஏப்ரல் மாத மத்தியில் இருந்து நாவல் பழங்கள் சீசன் துவங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here