உஷார்! உஷார்!! உங்கள் குழந்தைகளின் தகவல் கசிகிறது!

வாஷிங்டன்:பேஸ்புக் தகவல்களை கசியவிடுகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கூகுள், யூடியூப் ஆகியவற்றின் மீதும் புகார் கிளம்பியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் தகவல்கள் மீது வணிகநிறுவனங்கள் கவனம் செலுத்துவது தெரியவந்துள்ளது.

இணையத்தில் சில பக்கங்களில் தேடுதல் செய்யும்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
விடியோ அல்லது தகவல் தொடர்பான விபரங்களை பெறும்போது தனிநபர் விபரங்களை தெரிந்துகொள்ளும் உரிமை கேட்டு பெறப்படுகிறது.

இவ்விபரங்கள் தொகுக்கப்பட்டு பெரும் வணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
அந்த விபரங்கள் வாயிலாக இணையத்தில் தேடவந்த நபர் எங்குள்ளார். அவரது விருப்பு வெறுப்புகள், தேவைகள் குறித்து தகவல்கள் பெறப்படுகின்றன.அந்நபர் மீண்டும் இணையத்தில்தேடும்போது அவரது தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்யும் விளம்பரங்கள் அவர் தேடும் பக்கங்களில் இடம்பெற செய்யப்படுகின்றன.
குழந்தைகள் கூகுள், யூடியூப் போன்றவற்றை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் அவர்கள் எளிதில் கசிந்து அவர்களது எதிர்காலத்தை பெரும் நிறுவனங்கள் தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது என்று சமூக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகம் முழுவதும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். குழந்தைகளை இணையத்தின் பிடியில் இருந்து விலக்கி சுதந்திரமனிதர்களாக இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here