அல்ஜீரியா விமான விபத்து! 200 ராணுவ வீரர்கள் பலி!!

அல்ஜீரியா: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 257பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.அல்ஜீரியா தலைநகரான போபரிக் விமான நிலையத்தில் இருந்து 250 வீரர்களுடன் ராணுவம் சென்றுகொண்டிருந்தது.
மேற்கு அல்ஜீரியாவுக்கு அவ்விமானம் சென்றுகொண்டிருந்தது.

புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானம் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்தது.
விமானத்தின் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறால் தரையிறங்க முயற்சித்ததாகவும் இதனால் விமானம் தரையில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here