வருண் தேஜ் நடிக்கும் படத்தில் அதிதி ராவுடன் லாவண்யா திரிபாதியும் இணைகிறார்!

ஐதராபாத்: வருண் தேஜ் ஃபிடா, தொலி பிரேமா ஆகிய காதல் திரைப்படங்களைத் தொடர்ந்து, சங்கல்ப் ரெட்டி இயக்கும் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.சங்கல்ப் ரெட்டி இந்திய அளவில் வரவேற்பு பெற்ற காஸி படத்தை இயக்கியவர்.ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத
ஸ்பேஸ் த்ரில்லர் படத்துக்காக வருண் தேஜும் கதாநாயகி அதிதி ராவும் விண்வெளி வீரர்களாக நடிக்க உள்ளனர்.இதில் மற்றொரு கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வருண் தேஜின் காதலியாக லாவண்யா நடிப்பார் என தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here