Connect with us

Tamilnadu

ஸ்டெர்லைட் ஆலை அனுமதி! புதுப்பிக்க அரசு திடீர் மறுப்பு!!

Published

on

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் அனுமதியை புதுப்பிக்க தமிழக அரசு மறுத்துள்ளது.தமிழ்நாடு மாசுகட்டுப்பட்டு வாரியத்திடம் இருந்து ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கவேண்டியது அவசியம்.தற்போது ஆலை விரிவாக்கப்பணியில் ஈடுபட்டு வருகிறது.அதற்கு மக்கள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.நடப்பு நிதியாண்டுக்காக ஆலை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுகட்டுப்பாடு தொடர்பாக பல விதிமுறைகளை பின்பற்றவில்லை.இதனால், ஆலை உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு 26நிபந்தனைகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்டது. அதில் பெரும்பான்மையானவற்றை ஆலை நிர்வாகம் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ஸ்டெர்லைட் ஆலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலையின்
தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாக மேலும் பல தகவல்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.அதனைச் சரிபார்த்து மீண்டும் ஒப்புதல் கிடைக்கும்
என்று எதிர்பார்க்கிறோம்.அனுமதி கிடைக்கும் வரை ஆலை மூடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator