Connect with us

Sports

சேப்பாக்கத்தில் பரபரப்பு! கிரிக்கெட் வீரர்கள் மீது ஷூ வீச்சு!!

Published

on

சென்னை:சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் மீது ஷூக்களை வீசியதாக  இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த விளையாட்டுக்கு தடைகோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதனால் ரசிகர்கள் எண்ணிக்கை மைதானத்தில் வெகுவாக குறைந்து இருந்தது.  ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது ரசிகர்களில் சிலர் நாம்தமிழர் கட்சி கொடியை அசைத்தபடி கோஷங்கள் எழுப்பினர்.

மைதானத்தில் இருந்த வீரர்கள் மீது ஷூக்களை வீசினர்.     இதனால் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விளையாட்டு தொடர்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக 20பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator