பாரதிய ஜனதா கட்சியில் பணமழை! வருமானம் 81.18சதவீதம் அதிகரிப்பு!!

டெல்லி: நாட்டின் பணக்கார கட்சியாக பாரதிய ஜனதா ரூ.1,034 கோடி சொத்துக்களை கொண்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தொண்டுநிறுவனம் அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் சேகரித்தது. அதனை அறிக்கையாக்கி வெளியிட்டுள்ளது.அதன் விபரம்: 2016-17 ஆம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.1,559.17 கோடி.
பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் ரூ.1,034.27 கோடி வருமானம்.
அரசியல் கட்சிகளின் மொத்த வருமானத்தில் இது 66.34 சதவீதம்.
பாஜகவுக்கு அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ரூ.225.36 கோடிக்கு சொத்து உள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகக்குறைவாக ரூ2.08 கோடி வருமானம் உள்ளது.
அரசியல்கட்சிகளும் தாராளமாக செலவு செய்துள்ளன.
பாஜக – ரூ 710.05 கோடி., காங்கிரஸ்- ரூ 321.66 கோடி., பகுஜன் சமாஜ் – ரூ51.83 கோடிஎன்று செலவிட்டுள்ளன.
2015-16 முதல் 2016-17 ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 81.18 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதாவது, ரூ570.86 கோடியாக இருந்த வருவாய் ரூ.1034.27 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் வருமானம் 14 சதவீதம் குறைந்துள்ளது. ரூ.261.56 கோடியில் இருந்து ரூ.225.36 கோடியாக சரிந்துள்ளது. இருப்பினும், அக்கட்சி வருமானத்தை விடவும் அதிகமாக செலவுசெய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here