வாகன சோதனையில் ரூ.2.25 கோடி தங்கம் பறிமுதல்!

தார்வாட்: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அம்மாநில போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தார்வாட் மாவட்டத்தில் இன்று காலை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த கோவா மாநில பதிவு எண் கொண்ட காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.இந்த சோதனையின்போது கோவாவில் இருந்து ஹூப்ளி பகுதிக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற சுமார் ரூ.2.25 கோடி மதிப்புள்ள 7.7 கிலோ
தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.பனாஜியை சேர்ந்த பிரதிக் பிரதீப் நர்வேகர், விக்ரம் ரத்தோட் ஆகியோரிடம்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here