கொசு அடிக்க நேர்ந்ததால் கோபம்! விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணி!!

பெங்களூரு:விமானத்துக்குள் கொசு அடிக்க நேர்ந்ததால் கோபமடைந்த பயணி விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
இச்சம்பவம் இண்டிகோ தனியார் விமானத்தில் நடந்துள்ளது.

லக்னோவில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் கொசுக்கள் மொய்த்தன.
இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.
விமான இருக்கையில் இருந்த உணவு அட்டை உதவியுடன் கொசுக்களை விரட்டினர்.
ஆனாலும், பயணிகளை சுற்றிச்சுற்றிவந்து கொசுக்கள் மிரட்டின.
இதனால், டாக்டர். சவுரப் ராய் என்ற பயணி விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டார்.

அதனைத்தொடர்ந்து அவரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர்.
இதுகுறித்து சவுரப்ராய் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அவர் விமானத்தை கடத்துவேன் என்று மிரட்டினார். பிற பயணிகளை தூண்டிவிட்டார்.
இதனால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் என்று இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.விமானத்தில் குடிபுகுந்த கொசுக்களை விரட்டும் நடவடிக்கைகளுக்கு விதிமுறைகள் இடமளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலும் கொசுத்தொல்லை இருப்பதாக பயணிகள் சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here