லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து! 17 பேர் பலி!!

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே – சதாரா தேசிய நெடுஞ்சாலையின் கண்டாலா அருகே சாலையோர தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் லாரியில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்த அனைவரும் கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்த தொழிலாளர்கள். தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து போலீசார் கூறுகையில் லாரியில் 35 பேர் பயணம் செய்துள்ளனர். பலியானவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here