கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு! யுத்த களமான சென்னை!

சென்னை:ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து சென்னை நகரம் சிலமணிநேரம் யுத்தகளமாக மாறியது.
காவிரி போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தமிழகத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த எதிர்ப்பு கிளம்பியது.
ஆளும் கட்சி தவிர அனைத்து கட்சிகளும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர்.இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் நிர்வாகிகள் சென்னையில் போட்டி நடத்த தீவிரம் காட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரையுலகினர், அரசியல்கட்சிகள், விவசாயிகள், இளைஞர்கள் அமைப்பினர் சென்னை அண்ணாசாலையில் மாலை திரண்டனர்.

இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் மற்றும் பிரபலங்கள் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். சிலர் ஐபிஎல் காட்சிக்கான டிக்கெட்டுகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவ்வழியாக மைதானம் செல்லமுயன்ற ரசிகர்கள் தடுக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவியது. அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைந்து போக வைத்தனர்.
இரவு 9மணிவரை யுத்தகளமாக சென்னை காட்சியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here