மேய்ச்சலுக்கு சென்ற 56பசுக்கள் இறந்தது ஏன்?

திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கிரிஜால மண்டலம், பைதா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமப்பா. 100பசுக்களை வளர்த்து பால் வியாபாரம் செய்துவருகிறார்.நேற்று வழக்கம்போல் மாடுகளுக்கு வீட்டில் தீவனம் கொடுத்தார்.
பின்னர் மாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு அனுப்பினார்.
மாலையில் சுமார் 56மாடுகள் மேய்ச்சல் நிலம் அருகே செத்து விழுந்தது தெரியவந்தது.இம்மாடுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வயலில் மேய்ந்துள்ளன.
அந்த வயலில் கலப்பின மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை முடிந்திருந்தது.
மக்காச்சோளத்தை அறுவடை செய்தபின் எஞ்சியுள்ள தண்டுப்பகுதியை விவசாயிகள் வயலில் அப்படியே விட்டுச்செல்வது வழக்கம்.

அத்தண்டுப்பகுதியில் பயிர் செழித்துவளர்வதற்கு தெளிக்கப்பட்ட ஹைட்ரஜன் சயனைடு பூச்சிமருந்து இருந்தது தெரியவந்துள்ளது.
இவ்விஷத்தை அதிகளவில் சாப்பிட்டதால் பசுக்கள் இறந்துள்ளன.
இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். வயலில் இருந்து மக்காச்சோள பயிரின் தண்டுகளை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here