காவிரி போன்று சேப்பாக்கம்!! உற்சாகம் இல்லாமல் வறட்சி!

சென்னை:விசில் சத்தம் விண்ணைத்தொடவேண்டிய நேரத்தில் காவிரி போன்று உற்சாகம் வறண்டு காணப்படுகிறது சேப்பாக்கம்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதே கோரிக்கையை பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.
அதையடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – கொல்கத்தா அணியின் விளையாட்டுக்கு சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவாயில் அருகே கூடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அங்குள்ள கதவுக்கு பூட்டுப் போட முயற்சித்தனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர்.

மைதானத்துக்கு செல்லும் அண்ணா சாலையில் திரைப்படத்துறையினர், விவசாயிகள் போராடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு திகிலூட்டும் வகையில் நல்லபாம்புகளை மைதானத்துக்குள் விடுவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சேப்பாக்கம் மைதானம் ரசிகர்கள் இன்றி காக்கிச்சட்டைகளாக காணப்படுகிறது. சென்னை அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் மைதானத்துக்கு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here