காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கார்!

உத்திரப்பிரதேசம்: திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக அங்கு வைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை உடைத்தெறிந்தது. இதனால் பெரும் போராட்டம் நடைபெற்றது.இதைதொடர்ந்து பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் சிலைகள்
இரவோடு இரவாக உடைக்கப்பட்டன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் படாவுன் நகரத்தில் இருந்த அம்பேத்கர் சிலைமர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டது.இதற்கு முன் நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலை தற்போது காவி நிற பெயிண்ட்
அடிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here