விருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்த முடியாது!

டெல்லி: கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத என்னை தன்னுடன் வாழும்படி கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்துவதாக மனைவி தொடர்ந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனைவி என்பவள் ஒரு பொருள் அல்ல. கணவருடன் மனைவி சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றால் கட்டாயபடுத்த கூடாது. மனைவிக்கு விருப்பம் இல்லாத நிலையில் தன்னுடன் சேர்ந்து வாழ எப்படி கட்டாயப்படுத்த முடியும்?
மனைவி கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
வழக்கில் தொடர்புடைய கணவர் தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.கணவர் கொடுமைப்படுத்துவதால் அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாக,
மனைவியின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here