நினைத்தாலே போதும்! செய்துமுடிக்கிறது கருவி!!

அமெரிக்கா: ஆச்சர்யம் அளிக்கும் வகையில் நாம் நினைப்பவற்றை செயல்படுத்தும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பயிற்சிமையத்தில் இக்கருவி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.அம்மையத்தில் உள்ள அர்னவ் கபூர் என்பவர் தலைமையிலான குழு ஆல்டர் ஈகோ என்ற கருவியை வடிவமைத்துள்ளது.
ஆல்டர் ஈகோ கருவியில் 16டையோடுகள் உள்ளன.
அவை நமது மூளைத்தசை மற்றும் நரம்புகள் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கணிக்கின்றன.காதில் உள்ள பாதைவழியாக சென்று ஒலி நரம்புகளை அதிரவைக்கிறது.
இதனால் மூளைத்தசை, நரம்புகள் ஆகியவை வினையாற்றுகின்றன.
பின்னர் அதற்கான எதிர்வினை பதிலாக அல்லது செயலாக தரப்படுகிறது.மூளைத்தசை, நரம்புகளின் இயக்கத்தை துல்லியமாக தெரிந்துகொள்ளும் ஆல்டர் ஈகோ கருவி அதற்கேற்ப செயல்படுகிறது.
இத்தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது.எதிர்காலத்தில் செல்போன், வீடுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்களில் இத்தொழில்நுட்பம் தவிர்க்கமுடியாததாக இடம்பெறும் என்று மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பயிற்சிமைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஒற்றைச்சொல் கட்டளைகள் ஆல்டர் ஈகோவால் மிகத்துல்லியமாக செய்துமுடிக்கப்படுகின்றன.
வருங்காலத்தில் இச்சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here