காதலித்து திருமணம் செய்த மனைவியை கொன்ற குருக்கள் கைது!

சென்னை: சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகணேஷ். வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் குருக்களாக உள்ளார். இவரது மனைவி ஞானபிரியா. இருவரும் காதலித்து திருமணம்  செய்தவர்கள். சில நாட்களுக்கு முன் வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஞானபிரியா கொலை செய்யப்பட்டார். பாலகணேஷ் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்
கழிப்பறையில் மயங்கி கிடந்தார். வடபழனி போலீசார் பாலகணேஷை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நினைவு திரும்பிய பால கணேஷிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நள்ளிரவில், கழிப்பறைக்கு செல்ல வெளியே வந்தேன். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் என் தலையில் தாக்கி, கழிப்பறையில் கட்டி போட்டனர். பின், என் மனைவியையும் கொலை செய்துள்ளனர் என பாலகணேஷ் போலீசில் கூறினார். போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரவை பரிசோதித்தனர். அதில் பாலகணேஷ் கூறியது போல் மர்ம நபர்கள் யாரும் வரவில்லை என்று தெரிந்தது.
இதனால் போலீசாருக்கு பாலகணேஷ் மீதுசந்தேகத்தை ஏற்படுத்தியது. தனது மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சென்னை திரும்பியஅவரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியை கொலை செய்து பாலகணேஷ் நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here