20 ஆண்டுகளாக மகனை மரப்பெட்டியில் பூட்டி வைத்த தந்தை கைது!

ஜப்பான்: யமசாகி இவர் ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் சாண்டா நகரில் வசிக்கிறார். இவரின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்குச் சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளார். மனநலம் பாதித்த இவரது மகன் சில சமயங்களில் மோசமானசெயல்களில் ஈடுபட்டுள்ளார்.இவரை அவரது தந்தை ஒரு மீட்டர் உயரம் மட்டுமே உள்ள மரப்பெட்டியில் 20 ஆண்டுகளாக அடைத்து வைத்துள்ளார்.உணவு அளிப்பதற்கு மட்டும் மரப்பெட்டியை திறந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்தது. போலீசார் மனநலம் பாதித்தவரை மீட்டனர்.மீட்கப்பட்டவரை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைியில் சேர்த்துள்ளனர். அவருக்கு தற்போது 42 வயது.மனநலம் பாதிக்கப்பட்டவரை 20 ஆண்டுகள் மரப்பெட்டியில் அடைத்து வைத்ததற்காக அவரது தந்தை யமசாகியை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here