குஜராத்தில் வளரும் கோடீஸ்வர நாய்கள்!

குஜராத்: பஞ்சோட் கிராமம் குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சனா மாவட்டத்தில் உள்ளது. இக்கிராமத்தில் நாய்கள் கோடீஸ்வரர்களாக உள்ளன.பஞ்சோட் கிராமத்தில் மத்னிபடி குடாரியா என்ற அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளை பொதுமக்களிடம் இருந்து சுமார் எழுபது ஆண்டுகளாக அன்பளிப்பாக பெற்ற நிலங்கள் பல ஏக்கர் உள்ளன.
அவற்றின் இன்றைய சந்தை மதிப்பு பலகோடிகள் ஆகும்.
அக்கிராமத்தில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உணவு வழங்கவே அறக்கட்டளைக்கு நிலத்தை தானம் செய்துள்ளனர்.அறக்கட்டளை சார்பில் தற்போது சுமார் 70நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அவற்றுக்கு காலை, இரவில் ரொட்டி, குடிநீர் வழங்கப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் லட்டுக்கள் வழங்கப்படும்.

இதற்காக அன்பளிப்பு பெற்ற நிலங்கள் ஆண்டுதோறும் குத்தகைக்கு விடப்பட்டு பணம் பெறப்படுகிறது.
நிலத்தின் மதிப்பு தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நாய்க்கு சொந்தமாக ஒரு கோடிரூபாய் மதிப்பு நிலம் உள்ளது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here