தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது துப்பாக்கிச்சூடு!

டெல்லி: டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில் வசித்துவருபவர் அனுஜ் சௌத்ரி. இவரது மனைவி நிஷா சௌத்ரி உள்ளூர் கவுன்சிலர். அனுஜ் சௌத்ரி ‘சஹாரா சமய்’ என்னும் இந்தி தொலைக்காட்சி செய்தி சேனலில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.ராசபூரில் உள்ள இவரின் வீட்டிற்கு நேற்று மாலை 6.15 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் வந்துள்ளனர். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனுஜ் சௌத்ரியை 6 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளனர். இரண்டு குண்டுகள் அவரது வயிற்றிலும், இரண்டு குண்டுகள் வலது கையிலும் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அனுஜ் சௌத்ரி யசோதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து கவிநகர் போலீஸ் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறியபோது முன் விரோதம் காரணமாகத்
இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம்.குற்றவாளிகளைத் பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here