நடனஅழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசிய காவலர் சஸ்பெண்ட்!

உத்திரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் நடன அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசிய காவலர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உன்னவோ பகுதியில் உள்ளுர் திருவிழாவில்கலைநிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பாலிவுட் பாடல்களுக்கு நடன அழகிகள் நடனம் ஆடினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கவாலர் மேடையில் நடனமாடிய பெண்களுக்கு ரூபாய் நோட்டுகளை வழங்கினார். பெண்கள் நடனம் ஆட ரூயாய் நோட்டுகளை வீசியும் உள்ளார்.
இந்த காட்சிகளை படம் பிடித்த சிலர் சமூக வலைதளத்தில்பதிவேற்றம் செய்தனர்.
வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here