உண்ணாவிரதம் துவங்க நேரம் இருக்கு…! பூரி, பரோட்டா… வெளுத்துக்கட்டிய காங்கிரசார்!

டெல்லி: உண்ணாவிரதத்துக்கு செல்லுமுன் பரோட்டா, பூரியை வயிறுமுட்ட தின்ற காங்கிரசாரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் தரப்பில் இன்று நாடு தழுவிய உண்ணாவிரதம் நடந்தது.நாட்டில் அதிகரித்துவரும் வன்முறையை கட்டுப்படுத்தக்கோரியும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.மாநில தலைநகரங்களில் காங்., நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
டில்லியை சேர்ந்த மாநில காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய்மக்கானும் பூரி செட் மற்றும் இனிப்பு வகைகளை மிக ஆர்வமாக சாப்பிட்டு கொண்டிருந்தனர்.காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் துவங்குவதாக இருந்தது.
ஆனால் 8 மணிக்கு காங்., நிர்வாகிகள் ஓட்டலில் குவிந்திருந்தனர்.
காங்கிரஸ் உண்ணாவிரதத்தின் லட்சணம் இதுதான் என்று பாஜக இப்படங்களை வெளியிட்டு கண்டனம்தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here