காமன்வெல்த் விளையாட்டு போட்டி! பதக்க வேட்டையை தொடரும் இந்தியா!!

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் பதக்கங்களை அறுவடை செய்துவருகின்றனர்.பளுதூக்கும் போட்டியின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் பூனம் யாதவ் தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் விகாஸ் தாக்குர் வெண்கலம் வென்றார். இதனால் இந்தியாவின் தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 5ஆகியுள்ளது.

5ம் நாளான திங்கட்கிழமை ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 105கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரதீப்சிங் வெள்ளிவென்றார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஜித்துராய் தங்கம் வென்றார். டேபிள்டென்னிஸ், கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது.

ஷாட்புட், பத்தாயிரம் மீட்டர் ஓட்டம், நீச்சல் போட்டிகளில் இந்தியாவுக்கு ஏமாற்றம் கிடைத்தது.
பதக்கப்பட்டியலில் 19பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது இந்தியா.
முதலிடத்தில் ஆஸ்திரேலியா(106), இங்கிலாந்து(63) நாடுகள் உள்ளன. தங்கம்-10, வெள்ளி-4, வெண்கலம்-5 என்று இந்தியாவின் பதக்கப்பட்டியல் நீண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here